Pages - Menu

Wednesday, 7 November 2012

கல்வெட்டுகள்

குட்டி வயசில் எனக்கு எண்ணை தேய்த்துவிட்டு
நெட்டி முறித்து சுவரில் தேய்த்த பாட்டியின் கைத்தடம்

அம்மாவின் பால் கணக்கு பெருக்கல் குறிகள்

அப்பா எனக்கு சொன்ன ஓவியக் கதைகள்
...

ஓட்டுக் கூரைக் கம்பியில் தொங்கும் கடிதங்கள்

தாத்தா சாய்ந்து அமர்ந்த திண்ணையில் அவரின்
சுண்ணாம்புத் தீற்றல்

உயர்த்திலே தொங்கும் காலி குருவிக் கூடு

யாருமே இல்லையென்றாலும் எல்லாம்
இருக்கிறது அதில்.....

எப்படிப் பிரிவேன் உன்னை

கல்வெட்டுக்கள் கோவிலில் மட்டும்தானா?
See More

No comments:

Post a Comment