எட்டய புரத்து கவிவேந்தன்… இல்லாத்தை எண்ணி வருந்தாதே மனமே.. எத்தனை விந்தை இயற்கையின் படைப்பில்... திறந்தவெளி காற்றை சுவாசிக்க உனக்கு தடையேதும் இல்லையே கரைபுரண்டு ஓடும் நதியில் உனக்கு நீந்த தடையேதும் இல்லையே இரவு நிலாவையும், இனிய மலர்களையும் உனக்கு ரசிக்கத் தடையேதும் இல்லையே பட்சிகளின் கிண்கிணி ஓசையையும், காகத்தின் கரகரப்பு பாஷயையும் மானின் மருண்ட பார்வையையும், பாசம் காட்டும் தாய்ப் பூனையையும் உன்னல் ரசிக்க இயலுமே… விடிகாலை பொழுதையும், விடிவெள்ளி முளைப்பதையும், உன்னால் ரசிக்கலாகாதா? ஒரு நாளின் 24 மணி நேர துளிகளில் இவற்றில் ஒன்றாவதையாவது ரசிக்க கற்றுக்கொள்… இருப்பதை ரசிக்க ருசிக்க அனுபவிக்க கற்றுக்கொள்… வாழ்க்கை சுகமானதாகும்… ஜானகி டீச்சர்... |
No comments:
Post a Comment