Pages - Menu

Wednesday, 7 November 2012

நிகழ் காலம்

காலை எழுந்து பல் தேய்க்கும் போதே கோலம் போடும் சிந்தனை
கோலம் போடும் போது காபி கலக்க வேண்டும், காபி கலக்கும் போதோ காலை ஃடிஃபன் யோசனை, டிஃபன் செய்யும் போதே வெளி வேலை, மதிய சமையல் யோசனை, அப்பொழுதோ மாலை இரவு வேலைகளில் ஞாபகம், படுக்கப் போகும் போதோ மறுனாள் பற்றியோ முதல் நாள் பற்றியோ சிந்தனை........

மிகக் குறைந்த நேரமே நிகழ்காலத்தில் இருக்கிறோம்..அது கூட எங்கெயோ சுட்டுக் கொண்டாலோ அல்லது இடித்தாலோ நிகழ்காலத்திற்கு வருகிறோம்..மிகச் சில நொடிகள் மட்டுமே

நிகழ்காலத்தில் நாம் இருப்பது மிக சொற்பமே

No comments:

Post a Comment