Pages - Menu

Sunday, 3 November 2013

ஃபேவரைட் சாமி !!!

எல்லாருக்கும் ஒரு ஃபேவரைட் சாமி என்று ஒன்று உண்டு.
ஏதாவது காரியம்னா அந்த சாமிக்கு காசு முடிந்து வைத்தல்,
வேண்டுதல் என்று செய்வோம்.

ஆனா சிறிய வயதில் பரிக்ஷை சமயம் அல்லது ரிசல்ட் வரும் சமயம் நம்பளுக்கு பிடித்த சாமியை வேண்டிட்டு போவோம்.

அதே சமயம் நம் ஃபேவரைட் சாமிக்கு பக்கத்தில்
இன்னோரு கோவில் அலல்து சாமி படம் இருந்தால் மற்ற நேரம் மாதிரி போகாமல்
"அய்யோ அந்த சாமி கோபிச்சுக்கப் போவுதே, அதை பிடிக்கலை"...,ன்னு நினைச்சு நம்மை ஃபெயில் ஆக்கிடப் போகுதேன்னு அதுக்கும் வேண்டிப்போம்.

நான் நிறைய பண்ணியிருக்கேன்.. வாசல் வரை போய்விட்டு வந்து வேண்டிகிட்டு திரும்ப திரும்ப பார்த்து மனசுக்குள் வேண்டிப்பேன்.
சரியா தொட்டு கும்பிடலையோன்னு திரும்ப சரியா காலை தொட்டு சேவிப்பேன்.

இன்னோன்று கண்ணை மூடிட்டு " இப்ப நான் தொடறது உன் காலா இருக்கனும்", அப்படின்னு நினைச்சு தொடுவேன். காலா இருந்துட்டா ரொம்ப குஷி. இல்லேண்ணா கொஞ்சம் பயமா இருக்கும். சரி சாமியே கையை வந்து பிடிச்சுக்கோன்னு சொல்லுதுன்னு நினைச்சுப்பேன்.

இப்படி ஏதாவது ஏடாகூடமா வருவதற்கு இதை பண்ணாமலேயே இருக்கலாம்னு தோணினாலும் மனசு விடாது.

என்னமோ இப்ப இது தோணிச்சு.. உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு....
 

No comments:

Post a Comment