Pages - Menu

Thursday 27 February 2014

மஹா பெரியவா.......













பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும். "பொழுதுபோக்கு" ன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சிசாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும். "லைப்...ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா?..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்க...ு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே "த்யாகம் பண்ணி அனுபவி" ன்னு சொல்றது.

காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார்.

தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், "எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும்

மஹா பெரியவா.......

வரையறை


வாழ்வில் எவ்வளவோ விஷயங்களில், அது நமக்கு சரிவராது, நமக்கு, நம் உடம்புக்கு நல்லது அல்ல, என்று தெரிந்த பொழுதும் நம்மால் அவ்விஷயங்களை விட்டு விலக முடியாது.

தினமும் இது தொடரக் கூடாது என்று சொல்லிக்கொண்டே அதை செய்து கொண்டிருப்போம். ஆனால், என்றாவது நம்மை அறியாமலே ஒரு பொறி கிளம்பி நம் மனது அதிலிருந்து விலக ஆரம்பித்துவிடும்.
அந்தப் பொறி தோன்றும் வரை திண்டாட்டம் தான்.
...

எப்பொழுது அதை விலக்க வேண்டும் என்று உங்கள் மனது முடிவெடுத்துவிட்டதோ கண்டிப்பாக உங்க வாழ்வில் முன்னேற்றம் தான்..

குடிப்பழக்கம், சிகெரட் என்பது போன்ற விஷயங்களிலிருந்தும் நம்மால் விட்டு விலகி வரமுடியும்.

நம் செயலால் நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் எந்த பாதிப்பும் உண்டாக்காது இருப்போம்.


வாழ்க வளமுடன்.

தானம்

தான எண்ணத்தையும் தானம் செய்க !

வே தம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது யாகம்தான். யாகமும் த்யாகமும் ஒன்றுதான். இங்கிலீஷில்கூட யாகம், த்யாகம் இரண்டையும் 'ஸாக்ரிஃபைஸ்' என்றுதானே சொல்கிறார்கள்? ஆனதால், வைதிகம் என்பது தன்னலமே கருதுவது என்கிற அபிப்ராயம் அடியோடு பிசகு. தன்னலத்தை முழுக்க த்யாகம் பண்ணுவதுதான் ஸநாதன தர்மத்தின் லக்ஷ்யம். இங்கே 'தர்மம்'என்பதே மதம். வேத தர்மம், ஹிந்து தர்மம் என்றாலே வேதமதம், ஹ...
ிந்து மதம் என்றுதான் அர்த்தம். இதே 'தர்மம்' பரோபகாரங்களில் ஒன்றான ஈகையாக நினைக்கப்படுவதை முன்பே சொன்னேன். அதனால் நம் மதமே பரோபகாரமானதுதான்.

யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு த்யாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, ஸுபிக்ஷம் நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் த்யாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்.

சொத்து ஸ்வதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற ஸுகம் ரொம்பவும் தாற்காலிகமானது இந்தத் தாற்காலிக ஸுகம் நித்ய ஸெளக்கியமான ஆத்மாபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால் இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது;சாஸ்வத ஸெளக்யத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான ''ஈசாவாஸ்ய'' த்தில் முதல் மந்த்ரத்திலேயே, ''த்யாகம் பண்ணி அநுபவி'' என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ஃபிலாஸஃபி முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த இந்த உபநிஷத்தை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஸ்லோகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் த்யாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, ''நான் தான் கர்த்தா என்பதால் இதன் ப்ரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே!அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம த்யாக புத்தியில் ''ந மம'' - ''எனதில்லை;எனக்கில்லை''என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் த்யாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.

மற்ற வஸ்துக்களை கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ணவேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும்.

மஹாபலி நிறையக் கொடுத்தான்; வாரி வாரிக் கொடுத்தான். ஆனால் தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்கு பலி கொடுக்கவில்லை. இதானால்தான் பகவானே அவனிடம் இந்த அஹங்காரத்தை யாசகமாகப் பெற்று,அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

''ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்''என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது.

மஹா பெரியவா.....

சூழ்னிலை

 
நம்முடைய சொந்தங்கள், தோழிகள், நெருங்கியவர்களிடம் சில விஷயங்களை பகிர்வதற்கு நினைப்போம். மனசை பாதித்த, பிடித்த, பிடிக்காத, உடனடியாக சொல்ல வேண்டிய விஷயங்கள் என்று எத்தனனையொ இருக்கும். ஆனால் நினைத்தாலும் அவர்களை நம்மால் தொடர்பு கொள்ள முடியாத சூழ்னிலை இருக்கும் பொழுது மனசு துவண்டு போய்விடுகிறது...

சென்னையில் கிண்டி அருகில் எங்களது நெருங்கிய நண்பர் தன்னுடைய 12 வயது பெண் குழந்தையை பில...
்லியனில் உட்காரவைத்து வந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த யமஹா யமனாக வந்து இடித்து அப்பா திரும்பிப் பார்ப்பதற்குள் குழந்தை கூழாகிவிட்டது.

அந்த தந்தையிடம் உடனே பேச ஆறுதல் சொல்ல மனம் துடிக்கிறது. ஆனால் இந்த சூழ்னிலையில் எப்படி பேசுவது?
 
இது போன்று நிறைய விஷயங்கள் அந்த சமயத்தில் சொல்லப் படாத விஷயங்கள் பிறகு சொல்லும் பொழுது அதில் உயிர் இருப்பதில்லை...

அம்மா

அம்மா.........
அம்மாவை இழந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. 
அம்மாவுக்கு நம்மால் செய்யா முடியாமல் போனவைகளை நினைத்து மனம் ஏங்குகிறது...
இப்ப செய்யமுடியலை அதலானென்ன பரவாயில்லைஅடுத்த் தடவை வரும் பொழுது வாங்கித்தரலாம் என்று விட்ட விஷயங்கள், 
பிறகு சொல்லலாம் என்று சொல்லாமல் விட்டவை, 
 அம்மா சொல்ல வந்து கேட்காத விஷயங்கள் என்று எல்லாம் சேர்ந்து மனசு கனக்கிறது...

அம்மா இல்லாத அன்னையர் தினம் ரொம்ப அம்மாவை ஞாபகப் படுத்துகிறது....

எல்லா அன்னையருக்கும் எனது நமஸ்காரங்கள்....

ஸ்ரீ அரவிந்தர்

தன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக் கொண்டு
அவற்றினிலிருந்து விலகுவதும்,
அவற்றை விலக்குவதுமே
முக்திக்கு வழியாகும்.
 
ஸ்ரீ அரவிந்தர்...........

மஹா பெரியவா......

நாம் பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினை தந்திருக்கிறார்..

மஹா பெரியவா......